சூரிய குடும்பம் (Solar System)






Solar System





சூரிய குடும்பம் (Solar System


சூரிய அமைப்பு (Solar System) அல்லது சூரியக் குடும்பம் என்பது சூரிய னுக்கும்அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும். இந்த அமைப்பில் சூரியனை நேரடியாக சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும், சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு சூரிய அமைப்பு பொருட்கள் போன்றவையும், சூரியனை மறைமுகமாக சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.

4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மூலக்கூறு ஏற்பட்ட ஈர்ப்புவிசை சுருக்கம் காரணமாக சூரிய அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் எடையில் பெரும்பகுதியை சூரியனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக அதிக எடை கொண்டது வியாழன் கோளாகும். புதன்வெள்ளிபுமீ மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட்கோள்கள், புவியொத்த கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை. பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப பெருங்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital path) கதிரவனைச் சுற்றிவருகின்றன.

சூரிய அமைப்பு சிறு பொருட்களையும் கொண்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ள சிறுகோள் பட்டை  (Asteroid belt) அகக்கோள்களைப் போல் உலோகங்கள் மற்ரும் தனிமங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது, இதில் குறுங்கோள் அமைந்துள்ளது. பனிக்கட்டிகளால் உருவான கைப்பர் பட்டை (Kuiper belt நெப்டியூனின் வட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதில் புளுட்டோஅவுமியா,  (Haumea) மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகிய குறுங்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளைத் தவிர, பல்வேறு சிறு சிறு பொருட்களும் தடையின்றிப் பயணித்து வருகின்றன. ஆறு கோள்களையும், குறைந்தபட்சம் நான்கு குறுங்கோள்களையும் பல சிறு பொருட்களையும் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நிலவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. புறக்கோள்கள் ஒவ்வொன்றையும் தூசு மற்றும் சிறு பொருட்களால் ஆன ஒரு கோள் வளையம் சுற்றியுள்ளது.

கதிரவ அமைப்பு பால்வெளி மணடலத்தில் மையத்தில் இருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஓரியன் கையில் (spiralarm)  அமைந்துள்ளது.





mercury planet புதன் கிரகாம்