பார்த்தீனியம் பார்சீனியம்



பார்த்தீனியம்



இவற்றால் நன்மைகளை விட தீமையே அதிகம். காரணம். அந்நிய நாட்டில் எந்தவொரு தாவரமும் களைதான். உதாரணம் ஆசுதிரேலியாவில் 70% அதிகமாக அந்நிய செடிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதைத் தடுக்க அந்நாடு வெளிநாடுகளிலிருந்து செடிகளை இறக்குவதில் தடை விதித்துள்ளது. அதேபோல் இத்தாவரமும் நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. இவை தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் பரந்து கிடக்கின்றன. இவை வெளியிடும் மகரந்தம் மற்றும் வித்துக்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறுகளையும், ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துகின்றன. இவற்றின் மீது எமது உடல் படும் போது ஒருவிதமான அரிப்பு காணப்படும். இவற்றை உண்ணும் பசுக்களின் பால் ஒரு வித கசப்புத்தன்மையையும், சிறிதளவான அதாவது மறைமுகமான நச்சுத்தன்மையையும் கொண்டிருக்கும்.


இச்செடியை அழிப்பது கட்டாயமாகும். ஏனெனில் இவை விளைநிலங்களையும் வளிமண்டலத்தையும் பெரிதும் மாசுபடுத்துகின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வினமே அழிவதற்கு பெருங்காரணமாய்த் திகழ்கின்றன. இவைகளை அழிக்கச் செடிகளைப் பிடுங்கிப் பள்ளத்தில் இட்டு உப்புக்கரைசல் அல்லது காமாக்சின் (எறும்பு மருந்தாகவும் பயன்படுகிறது) என்னும் வேதிப்பொருளை இட்டு குழிகளை மூடுவதன் மூலம் இக்களைகளை நாமழிக்கமுடியும்.
ஒரேயடியாக அழிப்பதென்பது சாத்தியமில்லாததொன்று ஆகையால் இவைகளை தழைச்சத்தாக பயிர்களுக்கு இடுவதன் மூலமும் இவைகளைக் கட்டுப்படுத்தமுடியும்.இக்களைகளை அகற்றுவதற்கு இவற்றை எரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
பார்த்தீனியத்தின் பூர்வீக நாடு அமெரிக்கா ஆகும். அக்காலங்களில் அமெரிக்கா இந்தியாவுக்கு கோதுமை மா போன்ற உணவுப்பொருட்களை இறக்குமதி செய்தது. அதன்போது அவை கோதுமை மாக்களுடன் கலக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தடைந்தது என நம்பப்படுகின்றது.



No comments:

Post a Comment