நான் யார் தெரியுமா ?!?!?!





மனதை கொன்று  தன்னை
மனிதன் என்று கூறும் மிருகம்.

கனவை தொலைத்து கடவுளை 
தேடும் கயவன்.

மோஹத்தில் வீழ்ந்து மூதாரை மதிக்காத முட்டாள் .

சல்லாபம் ஒன்றே சகலமும் என நம்பும் சாத்தான் .

சுயத்தை இழந்து சுகத்தை தேடும் சோம்பேரி.

இயல்பை மறந்து இன்பத்தை தேடும் ஏமாளி .

பாசத்தை தொழைத்து பணத்தைத்
தேடும் பரதேசி. 

உதவத்தெரியாத உழைப்பாளி
உலகம் அறியாத கோமாலி.

எனக்கென்ன தகுதி இருக்கிறது உன்னையும் இவ்வுலகையும் விமர்சிக்க ?!?!?!
























மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ?


மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ?
யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள்.
இல்லை...! அவர் ஒரு தமிழர். அதுவும் தனது 14வயதில் கண்டுபிடித்து சாதனை செய்த சிவா அய்யாதுரை.
ஒரு வீடியோ, போட்டோ, கடிதமாகவோ இருக்கட்டும் உடனே ஒருவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் (Email) லில் அனுப்பினால் அனுப்பிய மறு நிமிடம் அவருக்கு கிடைத்துவிடும்.
மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே (Email) இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரில் வசித்துவருபவர்.
அவருடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி, அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர்.
பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்து,
1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள “யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி’யில்
கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தார் அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர் மயமாக்க முடியுமா? என்று அவர்கள் கேட்ட போது இவருக்கு 14 வயது.
தொடர்ந்து பலநாட்கள் கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினார். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தார்.
இந்த E MAIL-ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.
இவர்தான் FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவர், இது DATABASE, LAN உடன் தொடர்புடையதாக இருந்தது.
இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் இவர் உருவாக்கியவை.
அதற்குப் பிறகு “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றார்,
மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் இவரும் ஒருவர்.
1982 ஆகஸ்ட் 30 இல் இ-மெயிலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமை பெற்றார். 

சூரியன் SUN


சூரியன் SUN



சூரியன் sun



இது பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும்.இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும் பலூனில் அடைக்கப்பட்டிருக்கும் ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும்,அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது.
சூரியனில் இருந்து பெறப்படும் ஒளிச்சக்தி தாவரங்களின் வளர்ச்சியில் பங்களிக்கிறது. நாம் தாவரங்களில் இருந்து உணவை பெற்றுக் கொள்கிறோம். நாம் தாவரங்களின் மற்றைய பாகங்களை சமையலில் எரிப்பதற்குப் பயன்படுத்துகிறோம். ஆகவே எமது அன்றாட வாழ்க்கைக்கு சூரியன் மிக அவசியமாகும்

சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது


சூரியனின் எல்லா பகுதிகளும் ஒரே வெப்பநிலையில் இல்லாமல் சில பகுதிகள் சற்றுகுளிர்ச்சியாக உள்ளதால் அப்பகுதிகள் இருளாக காட்சி அளிக்கின்றன. இதனால் சூரியனில் புள்ளிகள் போன்ற தோற்றம் உருவாகிறது இதை நாம் "சூரிய புள்ளிகள்" என அழைக்கிறோம்.