சீமை கருவேலம் மரம்

சீமை கருவேலம் மரம்



நமது நாட்டின் வளமான பகுதிகளை சீரழித்த,  சீரழித்து கொண்டிருக்கிற 
மரம் இந்த சீமை கருவேலம் மரம். இது ஒரு நச்சு மரம்.  அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களால் ஆபத்தான தாவரம் என்று அறிவித்து தடை செய்துள்ளனர். மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட, இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த சீமை கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி 


சீமை கருவேலம் மரத்தின் தீமைகள்

  • இது நிலத்தடி நீரை வற்றி போகச்செய்துவிடுகின்றன மற்றும் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது

  • இது  கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.

  • இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் உயிர் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளரவிடாது

  • ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி 

  • விடுகிறது. மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.

  • இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் கால்நடை, மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்

  • இந்த நச்சு மரத்திலிருந்து வெளிவரும் வெப்பம் உயிரினங்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது

  • இவை கிராம மக்களுக்கு விறகாக, கரியாக பயன் பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு உதவுவதால் இன்னும் அப்படியே வளர்கிறது.

  •  இந்த முள் மர விதைகள் எத்தகைய பூச்சிகளுக்கும் இரையாகாமல், 10 ஆண்டு காலத்திற்கு பின்னும் முளைக்கும் வீரியம் கொண்டவை.  எத்தகைய வறண்ட நிலப்பரப்பிலும் 12 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையுடையது. இம்மர சல்லி வேர்கள் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் மேலேயே தேங்க வைத்து விடுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி, வேளாண்மை தொழிலுக்கு தீமை விளைவிக்கும்

  • இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.

  • இம்மரங்களில் பறவைகள் அமர்வதில்லை. கூர்மை மிக்க அடர்த்தியான முட்கள் இருப்பதால், எந்த பறவைகளாலும் இம்மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்ய முடிவதில்லை.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது.  அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா? நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது. 
விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன. ஆறு, ஏறி, கண்மாய் , குளம் என்று நீர் நிலைகளில் பரவி வந்த சீமைக் கருவேலமரம் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது. எண்ணிக்கையில் குறைந்த அளவே இருந்த காலத்தில் அடுப்பெரிக்கவும், விவசாய பகுதிகளைக் பாதுக்காக்கும் வேலியாகவும் பயன்பட்டு வந்த இந்த மரங்கள் நாளடைவில் கட்டுப்பாடற்று விதை பரவி விவசாய நிலங்களிலும் வளர ஆரம்பித்து விட்டது. நீரின்மையால் விவசாயத்தில் சரிவர ஈடுபட முடியாமல் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு தானாக வளரும் இந்த சீமை கருவேலமரங்கள் வாழ்வதற்கு தேவையான வருமானத்தை வழங்கியதால் அனைத்து பகுதியிலும் இந்த மரங்கள் பெருகிவளர வாய்ப்பாக அமைந்தது. நீர் பற்றாக்குறையால் விவசாயத்தை இழந்த மக்களுக்கு நிலத்தடியில் நீரில்லாமலும் , மேகம் கூடியும் மழை பொழியாமலும் போவதற்கு காரணமே இந்த சீமைக் கருவேலமரம்தான் என்ற உண்மை 40 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மக்களுக்கு விளங்கிவருகிறது

No comments:

Post a Comment